CPB 4 - கருப்பொருள் குறிப்பு
1820களில் கண்டுபிடிக்கப்பட்ட ஒளிப்படவியல், நம் மேன்மைக்கோ நம் அழிவிற்கோ, நாம் நிகழ்வுகளை பதிவுசெய்யும் மற்றும் நினைவுகொள்ளும் விதத்தில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு நாளில் 5 பில்லியன் புகைப்படங்கள் எடுக்கப்படுகின்றன மற்றும் 14 பில்லியனுக்கும் அதிகமான படங்கள் சமூக ஊடகங்களில் தினமும் பகிரப்படுகின்றன. இன்று ஒளிப்படவியல் இயல்பான அனைவருக்குமான கலை வடிவமாக மாறியுள்ளது. இப்படியாக எண்ணற்ற புகைப்படங்கள் உருவாகும் இக்காலத்தில் புகைப்பட துறையினருக்கும் கலைஞர்களுக்கும் மட்டுமின்றி அனைவருக்கும் எழும் கேள்வி இது - நாம் ஏன் புகைப்படம் எடுக்கிறோம்?
சென்னை ஃபோட்டோ பியனலேவின் நான்காவது பதிப்பு அதன் முதன்மையான உள்ளூக்கத்தை தயாநிதா சிங்கின் தொடரும் ஆய்வான "#போட்டோக்ராஃப்எடுப்பதுஏன்" என்பதிலிருந்து பெறுகிறது, இது புகைப்படவியலுடன் நமது உறவு பற்றிய முழுத் தொடர் விசாரணைகளை வெளிக்கொணர்கிறது. முதன்மையாக படைப்பை உருவாக்குவதிலும் பின்னர் அதன் வடிவம் மற்றும் அதை வழங்கும் விதத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் தயாநிதா, நம் காலத்தின் இந்த முக்கியமான கேள்வியோடு நாம் நம்மை தொடர்ந்து சரிபார்த்துக்கொண்டே இருக்குமாறு வலியுறுத்துகிறார்.
"புகைப்படக்கலைஞர்கள் ஃபோட்டோக்களை வெறும் உற்பத்தி மட்டும் செய்து கொடுத்தால் புகைப்படக்கலையின் எதிர்காலம் என்னாவது?" - தயாநிதா சிங்
யாருக்காக புகைப்படம் எடுக்கிறோம்? ஓளிப்படங்கள் எடுப்பவர், பயன்படுத்துபவர், பார்வையாளர் மற்றும் புகைப்படக்கலைக்கு என்ன ஆகிறது? நம் படங்கள் எவ்வாறான விளைவை ஏற்படுத்த விரும்புகிறோம்? புகைப்படக்கலைஞர் - படமெடுக்கப்படுபவர் உறவில் இருந்து நாம் எவ்வாறு இணை படைப்புரிமைக்கு மாறுவது? - போன்ற கேள்விகள் கடந்த ஆண்டுகளில் பல கலைஞர்கள் மற்றும் எழுத்தாளர்களின் நடைமுறைகள் மற்றும் நூல்களிலிருந்து தோன்றுகிறது. அவர்களில் சிலரை நீங்கள் கீழே சந்திக்கலாம்.
“ஓர் கலைஞரின் வேலை விடைகளை கொடுப்பதல்ல, சரியான வினாக்களை கேட்பதற்கான வேலையை உருவாக்குவதும் அதை நடைமுறைப்படுத்துவதும் தான்.” - சுனில் குப்தா
கண்கள் தெவிட்டிடும் இந்த சகாப்தத்தில் CPB4 நிழல்படம் உருவாக்குவதை பொருமையுடனும் நெருக்கமாகவும் அணுகுகிறது. இவ்வருட பியனலே பிரதிநிதித்துவ இடைவெளிகளின் மேல் கவனம் ஈர்க்கும் வழி முதன்மையான கதையாடல்களை மாற்றியமைப்போர், காலனித்துவ புகைப்படப்பாங்கை வழமைக்கு மாறான தன் தனித்துவமான அழகியலோடு கலப்பவர்கள் போன்ற பல்வேறு கலைஞர்களின் படைப்புகளை காட்சிபடுத்தும், நம் பார்வையை தனித்த ஒளிப்பட கலைஞர்களிடமிருந்து மாற்றுவது அக்கறை மற்றும் கூட்டு படைப்புரிமை சார்ந்த நெறியை உருவாக்கும்.
“தெளிவுபெற்ற பொதுநல பார்வை கிடைக்க என் பார்வை புலத்திலிருந்து என்னை நான் நீக்கிக்கொள்வதும் ஆழ்ந்து கவனிக்க கற்றுக்கொள்வதும் தான் என் பெருமுயர்ச்சியாக இருந்துள்ளன. இந்நாட்களில் பெரும்பானோர் கையில் ஏதோ ஒரு வகையான புகைப்படக்கருவி இருப்பதனால் ஒரு வகையில் ஒளிப்படக்கலை மக்களின் ஊடகமாக இருந்தாலும் தங்கள் கதைகளை கூறும் வாய்ப்பு எல்லோருக்கும் சமமாக அமைவதில்லை. பிரதிநிதித்துவத்தையும் காட்சிப்படுத்துதலையும் என்னுடைய பிடிப்பிலிருந்து விடுவிப்பதே என்னளவில் நான் முயற்சிப்பது. ஒளிப்படக்கலை ஒருசீரான பிரதிநிதித்துவத்தை நமக்கு பல்வகைப்படுத்த உதவுவதோடு மேலும் அதிகாரம், யார் சேர்த்துக்கொள்ளப்படுகிறார்கள் யார் விலக்கிவைக்கப்படுகிறார்கள் அதாவது சமூகத்தில் புலப்படுதல் போன்ற கருத்துக்களின் குறுகிய தன்மைய எண்ணங்களை விரிவடைய செய்கிறது. ஓர் இடத்தை, ஓர் நபரை நோக்கி நாம் செலுத்தும் கவனம் அன்பின், நம்பிக்கையின் செயலாகும்.” - கௌரி கில்
புகைப்படக்கலை வரலாற்றுக்கு உருவமளிக்கிறது ஆனால் வெறும் புகைப்படங்களை மட்டும் உண்மையாக ஏற்றுக்கொள்ளாமல் கலைஞர்கள் புகைப்பட உருவாக்கத்தின் அடிப்படை நோக்கத்தை கேள்விக்கு உட்படுத்துகின்றனர். இத்தகைய கருத்து புகைப்படங்களை நாம் கண்டு புரிந்துகொள்ளும் விதத்தையே மாற்றுகிறது.
“அதிகாரத்தின் கருவியான புகைப்படக்கலையை அதன் பாகங்களான கேமரா, படமெடுப்பவர், படமெடுக்கப்படும் சுற்றுப்புறம், பொருட்கள், நபர்கள், பார்வையாளர்கள் என எவற்றோடும் சுருக்கிவிட முடியாது. புகைப்படத்தின் உற்பத்தி, விநியோகம், பரிமாற்றம் மற்றும் நுகர்வு ஆகியவற்றைக் கொண்ட பல்வேறு செயல்களின் குழுமத்தை இது குறிக்கிறது. குடியுரிமைப்போல புகைப்படக்கலை யாருடைய உடைமையும் அல்ல.” - அரியெல்லா அசுலே
இச்சமயத்தில் பொருத்தமான கேள்வியொன்று பியனலே வை பிடித்துக்கொண்டது - யாருக்காக நடத்தப்படுகிறது இந்த பியனலே? CPB4 ஆனது உலகெங்கிலும் உள்ள காப்பாட்சியாளர்கள், புகைப்படக் கலைஞர்கள், லென்ஸ் சார்ந்த கலைஞர்கள் மற்றும் பார்வையாளர்களை ஒன்றிணைத்து எங்கள் நகரம் பின்னணியாக அமைய அரங்கேறும் கண்காட்சிகள் மற்றும் நிகழ்ச்சிகளை நாம் நேர்கண்டு அனுபவிக்கவே. பியனலே அனைத்து சென்னை வாசிகள், குடும்பங்கள், பயணிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் கலைஞர்களை தங்கள் நகரை புது ஒளியில் காண அழைக்கிறது.
புகைப்படக்கலை எவ்வாறு நம் வாழ்க்கையை வடிவமைத்தும் மாற்றவும் செய்கிறது என சிந்தனைமிக்க, கடுமையான மற்றும் விளையாட்டுத்தனமான புரிதலை வளர்க்க இந்தப் பதிப்பு முயற்சிக்கிறது. புகைப்படம் எடுத்தல் நமக்கு எவ்வாறு இன்றைய சூழலில் வாழ கற்றுக்கொடுக்கிறது?
போட்டோக்ராஃப் எடுப்பது ஏன்? என்ற கேள்வி யார் யாரென்று மட்டுமின்றி யார், எது, எங்கே மற்றும் ஏன் என்பவைகளையும் உங்களிடம் கொண்டு சேர்க்க முனைகிறது. இச்செயல்முறையின் வழி இவ்வூடகத்தின் வலிமைகளையும் போதாமைகளையும் சீராய்வு செய்ய முயற்சிப்போம். எங்கள் கண்காட்சிகளில் நீங்கள் சந்திக்கும் எழுத்து மற்றும் படங்கள் இந்த பியனலேவிற்காவோ அல்லது ஒரு புத்தகத்திற்காகவோ தயாரிக்கப்பட்டவை அல்ல. பியனலே புதிய புகைப்படக் கலைஞர்களை அறிமுகப்படுத்துவது, புகைப்பட நடைமுறைகளின் வரலாற்றைக் கொண்டாடுவது மட்டுமல்லாமல் நாம் காணும் சிந்திக்கும் உணரும் மற்றும் வெளிப்படுத்தும் விதத்தை ஆய்வு செய்ய தக்க நிகழ்வாக அமையும்.
“உலகின் குறைபாடுகளுக்கு அப்பால் காண்பதே நம் கடமை என நம்புகிறேன் - நம்மகத்திலும் வெளியுலகிலும் பார்வைக்கெட்டாது மறைந்து இருக்கும் மூலை முகடுகளில்.”
எங்கள் பார்வையாளர்களாகிய உங்களை சிந்திக்க, பகுப்பாராய மற்றும் தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்ய வரவேற்கிறோம்.